மேலும் செய்திகள்
எஸ்.பி., அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டம்
03-Apr-2025
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவில் சிறப்பு விசாரணை முகாம் நடந்தது.விழுப்புரம் மாவட்ட காவல் துறையின் குற்றப்பிரிவில், அதிகளவில் மனுக்கள் வந்து விசாரணை நடந்து வருகிறது. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும் விதமாக, எஸ்.பி., சரவணன் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு சிறப்பு மனு விசாரணை முகாம் நடந்தது.எஸ்.பி., அலுவலக குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, கூடுதல் எஸ்.பி.,க்கள் தினகரன், இளமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சப் இன்ஸ்பெக்டர்கள் வினோத்ராஜ், ராஜேஸ்வரி, சுரேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர், மனுதாரர்கள் முன்னிலையில், புகார்கள் குறித்து விசாரித்தனர்.முகாமில் 19 மனுக்கள் மீது விசாரணை நடத்தியதில், 13 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டது.
03-Apr-2025