உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம்

விழுப்புரம்: வளவனுார் வடக்கு அக்ரஹாரத்தில் உலக நன்மைக்காக சிறப்பு கூட்டு தியானம் நடைபெற்றது.பிரம்மாகுமாரிகள் இயக்க நிறுவனர் ஸ்ரீ பிரஜாபிதா பிரம்மாவின் 56வது நினைவு நாளை யொட்டி, உலக நன்மை வேண்டி நேற்று நடந்த சிறப்பு கூட்டு தியானத்தில் பிரம்மாகுமாரர், பிரம்மாகுமாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை, நிர்வாகி செல்வமுத்துக்குமரன் செய்திருந்தார்.இங்கு, தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், இரவு 7.00 மணி முதல் 8.30 மணி வரையிலும் இலவசமாக ராஜயோக தியான பயிற்சி மற்றும் ஞான விளக்கம் கற்றுத்தரப்படுகிறது.இந்த தியான பயிற்சி மூலம் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ