மேலும் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
31-Aug-2025
செஞ்சி: தாதங்குப்பம் கிராமத்தில் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. பிரதமர் மோடி பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த 'ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்' திட்டத்தை துவக்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக செஞ்சி அடுத்த தாதங்குப்பத்தில் ஜிப்மர் மருத்துவமனை சார்பில், பெண்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி முகாமை துவக்கி வைத்தார். தாதன்குப்பம் மக்கள் நல்வாழ்வு அறக்கட்டளை நிறுவனர் கோபாலகிருஷ்ணன், ஜிப்மர் மருத்துவமனை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை யளித்தனர். பொது மருத்துவம் தாய், சேய் நலம், கர்ப்பக்கால பராமரிப்பு, பரிசோதனைகள், குழந்தை நலம் மற்றும் ஆலோசனைகள் கண், காது, மூக்கு, தொண்டை, பல், மன நல ஆலோசனை சிறப்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதம மந்திரி பொதுஜென ஆரோக்கிய திட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி, உறுப்பினர் அட்டை வழங்கினர்.
31-Aug-2025