உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அங்காளம்மன் கோவிலில் த.வெ.க., சிறப்பு வழிபாடு

அங்காளம்மன் கோவிலில் த.வெ.க., சிறப்பு வழிபாடு

செஞ்சி, : த.வெ.க., தலைவர் விஜய் பிறந்த நாளையொட்டி, மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் கட்சியினர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளர் குணசரவணன் தலைமை தாங்கினார். தொடர்ந்து மேல்மலையனுாரில் கட்சி சார்பில் ஏழை, எளியவர்களுக்கு தினமும் உணவு வழங்க இயங்கி வரும் விலையில்லா விருந்தகத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவு வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகி சிவக்குமார் செய்திருந்தார்.இதே போல் மேல்மலையனுார் ஒன்றியத்தில் தாயனுார், கோவில்புரையூர், குந்தலம்பட்டு, நெச்சலுார், சாத்தம்பாடி, வளத்தி, அத்திப்பட்டிலும், செஞ்சி ஒன்றியத்தில் கவரை, கொம்மேடு வரிக்கல், கொணலுார், பழவலம், தேவதானம்பேட்டை, தடாகம் நல்லாண்பிள்ளை பெற்றாள், சென்னாலுார் ஆகிய கிளைகளிலும் பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை