விளையாட்டு உபகரணம் மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கல்
செஞ்சி: செஞ்சி ஒன்றிய ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.செஞ்சி ஒன்றியத்தில் உள்ள 60 ஊராட்சிகளில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது.ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, பி.டி.ஓ. சீதாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். இதில் 60 ஊராட்சி தலைவர்களிடம் கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டு பொருட்களின் தொகுப்பை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.இதில் மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை, ஏ.பி.டி.ஓ.,க்கள் குமார், சசிகலா, காஞ்சனா, ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், ஊராட்சி தலைவர்கள் சங்கத் தலைவர் ரவி மற்றும் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலாளர் பழனி நன்றி கூறினார்.