உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் முகாம்

உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம்; விழுப்புரம் அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமை, லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். விழுப்புரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, பிடாகம் கிராமத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று நடந்தது. லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்ததோடு, பொதுமக்களின் மனுக்கள் பதிவு செய்வதை ஆய்வு செய்தார். இதில், தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் ராஜா, முத்துசாமி, ஊராட்சி தலைவர் அய்யனார், துணை தலைவர் சூர்யா, வார்டு நிர்வாகிகள் கண்ணன், சந்திரா, கிளை செயலாளர் குபேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை