உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திண்டிவனம்: திண்டிவனத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முருங்கப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில், 2 மற்றும் 3 வது வார்டு மக்கள், அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். இந்த முகாமை, மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில், நகர்மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையாளர் குமரன், நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி, பொறியாளர் சரோஜா, மேலாளர் நெடுமாறன், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், ஒன்றிய கவுன்சிலர் அண்ணாதுரை, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ரேணுகா, திருமகள், பாபு, சந்திரன், ராஜசக்தி, பிர்லா செல்வம், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ், முன்னாள் நகர செயலாளர் கபிலன், வழக்கறிஞர் அசோகன், அயலக அணி முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் ஆய்வு செய்தார். மகளிர் உரிமைத்தொகை, பட்டா மாற்றம் என, மொத்தம், 439 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை