உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயியிடம் பணம் திருட்டு 

விவசாயியிடம் பணம் திருட்டு 

விக்கிரவாண்டி:திண்டிவனம் வட்டம் ரெட்டணை அருகே உள்ள வெங்கந்துார் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், 67; விவசாயி. இவர் நேற்று முன்தினம் ரெட்டணையிலுள்ள வங்கியில் தனது நகையை அடகு வைத்து கடனாக ரூபாய் 50 ஆயிரம் பெற்றார். அதை தனது ஸ்கூட்டர் சீட்டின் அடியில் வைத்துக் கொண்டு பின்னர் அங்கிருந்த டீக்கடைக்கு டீ குடித்தார். தொடர்ந்து வீட்டிற்கு போய் பார்த்த போது, ஸ்கூட்டியில் வைக்கப்பட்டிருந்த பணம் காணாமல் போனது தெரிந்தது. இதுகுறித்து புகாரின் பேரில், பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !