மேலும் செய்திகள்
அரசு துறைகள் ஆய்வுக்கூட்டம்
01-Jan-2025
விழுப்புரம்: பெஞ்சல் புயலால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிரந்தர மறுசீரமைப்பு பணிகளுக்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை கோருவது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைககள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் வெள்ளம் பாதித்து பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை, சாலைகள், மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள், குடியிருப்புகள், அரசு, பள்ளி கட்டடங்கள், மீன்பிடி படகுகள், ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் பெரும் சேதமடைந்தன. இதையொட்டி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பாதித்த பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடந்தது.இதையொட்டி, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிரந்தர மறு சீரமைப்பு பணிகளுக்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை கோருவது தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் பழனி தலைமை தாங்கி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, சுகாதாரம், பொதுப்பணி உட்பட பல்வேறு துறைகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம், கேட்டறிந்து விரைந்து நிதி மதிப்பீட்டு அறிக்கையை வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
01-Jan-2025