உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் பணியாளர்களுக்கு மன அழுத்தம் குறைக்க பயிற்சி

பெண் பணியாளர்களுக்கு மன அழுத்தம் குறைக்க பயிற்சி

விழுப்புரம் : அரசு போக்குவரத்துக் கழக பெண் பணியாளர்களுக்கான மன அழுத்தம் குறைப்பது தொடர்பான இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக கூட்டாண்மை பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சியில், பெண் பணியாளர்கள் சந்திக்க கூடிய பிரச்னைகள், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கூர்நோக்குகள், தீர்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.பின், தெளிவான விளக்கமும், பிரச்னைகள் தொடர்பான கலந்துரையாடல்களும், மன அழுத்தத்தை எளிதாக்க கூடிய வழிமுறைகள் வழங்கப்பட்டது.விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார், காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலத்தில் இருந்து பணிபுரியும் பெண் பணியாளர்கள் பங்கேற்றனர். சென்னை குளோபல் அட்ஜஸ்ட்மெண்ட் பவுண்டேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ருதி சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ