உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாவட்ட சிலம்பாட்ட போட்டி மாணவர்கள் பங்கேற்பு

மாவட்ட சிலம்பாட்ட போட்டி மாணவர்கள் பங்கேற்பு

விழுப்புரம்: தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் இணைந்து மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை விழுப்புரத்தில் நடத்தின.விழுப்புரம் தி நியூ ஜான்டூயி பள்ளியில் நடந்த போட்டியில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மினி சப் ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய வயது பிரிவின் அடிப்படையில் சிலம்பம் போட்டிகள் நடந்தன.போட்டியின் துவக்க விழாவிற்கு, ஜான்டூயி குழுமம் தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். போட்டியை, ஏ.எஸ்.பி., ரவீந்திரகுமார் குப்தா, நேருயுவகேந்திரா இளைஞர் நலன் விளையாட்டு அலுவலர் சஞ்சனா வாட்ஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். ஜான்டூயி நிர்வாக அதிகாரி எமர்சன் ராபின் வரவேற்றார்.விழுப்புரம் மாவட்ட சிலம்பாட்ட தலைவர் கந்தன், துணைத் தலைவர் ராஜேந்திரன், கலைச்செழியன், அருள்முருகன், பழனி, சதிஷ்குமார், சுதா முன்னிலை வகித்தனர். போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, ரோட்டரி சங்க தலைவர் துரைராஜ், செயலாளர் வினோத், பொருளாளர் சிவக்குமார் ஆகியோர் பரிசு வழங்கினர்.சென்னை, கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இருந்து நடுவர்கள் பங்கேற்றனர். மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் அன்பரசி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ