சூர்யா கல்லுாரியில் மாணவர்கள் பயிலரங்கம்
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா மேலாண்மைக் கல்லுாரியில் மாணவர்கள் பயிலரங்கம் நடந்தது.சூர்யா கல்விக் குழுமம் முதுநிலை வணிக நிர்வாகவியல் துறை சார்பில் நடந்த பயிலரங்கிற்கு, கல்லுாரி நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் பாலாஜி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ஆஷ்லே டோமினிக் பென்னி வரவேற்றார்.தலைமைத்துவ பயிற்சியாளர் தாமஸ் ராஜ்மோகன் ஆளுமை திறன், தலைமை பண்பு, நேர மேலாண்மை, நேர்முகத் தேர்வில் வெற்றி உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை கூறினார். கல்லுாரி பேராசிரியர்கள் உதவி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் பயிலரங்கில் பங்கேற்றனர்.