உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சாலையில் பள்ளங்களால் அவதி

சாலையில் பள்ளங்களால் அவதி

விழுப்புரம் : விழுப்புரத்தில் சாலையில் பள்ளங்களால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.விழுப்புரம், கலைஞர் நகர் பிரதான சாலை, அதிக வாகன போக்குவரத்துள்ள சாலையாக உள்ளது. திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து, கே.கே.ரோடு வழியாக நகருக்குள் செல்ல மாற்று சாலையாக இருப்பதால், அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை நீண்ட காலத்திற்கு பிறகு, கடந்தாண்டு தார்ச்சாலையாக புதுப்பிக்கப்பட்டது. ஆனால், சீனுவாசா நகர் முதல் பாதியளவு இந்த சாலை புதுப்பிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த சாலை புதுப்பிக்காமல், மேடும், பள்ளங்களாக தொடர்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி, மேலும் பள்ளங்களாக மாறியுள்ளது. விடுபட்ட சாலையை புதுப்பித்து தார்ச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !