உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் சஸ்பெண்ட்

லஞ்சம் வாங்கிய சர்வேயர் உதவியாளர் சஸ்பெண்ட்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே நரையூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி ராஜிவிடம், வீட்டுமனையை அளந்து உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்வதற்காக, கடந்த 23ம் தேதி 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, விழுப்புரம் நில அளவையர் ஸ்டாலின், 27; நரையூர் கிராமத்தைச் சேர்ந்த கிராம உதவியாளர் கிருஷ்ணன், 54; ஆகியோர், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.இந்த நிலையில், லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட நில அளவையர் ஸ்டாலினை, நில அளவைத் துறை உதவி இயக்குனர் ஜெயசங்கரும், கிராம உதவியாளர் கிருஷ்ணனை, தாசில்தார் கனிமொழியும் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ