பொறுப்பேற்பு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரத்தில் தாசில்தார் செல்வமூர்த்தி பொறுப்பேற்றார். கண்டாச்சிபுரத்தில் தாசில்தராக பணிபுரிந்த முத்து, சென்னைக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தாசில்தாராக இருந்த செல்வமூர்த்தி கண்டாச்சிபுரத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் விழுப்புரம் தாசில்தாராக பணிபுரிந்த மகாதேவன், விக்கிரவாண்டி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, திண்டிவனம் தாசில்தாராக பணிபுரிந்த யுவராஜ், விழுப்புரம் தாசில்தாராக நியமனம் செய்யப்பட்டு நேற்று விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், பொறுப்பேற்றார்.