மேலும் செய்திகள்
34 தலைமை ஆசிரியர் விருப்ப இடமாறுதல்
02-Jul-2025
மயிலம்: மயிலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார்.பள்ளியின் தமிழாசிரியர் அம்புரூஸ், ரேகா முன்னிலை வகித்தனர். பொறுப்பாசிரியர் ஜெயராஜ், பிரபு வரவேற்றனர். இந்நிகழ்வில் நெடி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணன், பேரணி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ராமராஜன் சிறப்புரையாற்றினர். பள்ளி மாணவர்கள் கவிதை, பேச்சு, பாட்டு ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியை அறிவியல் ஆசிரியர் ஜெயராமன் ஒருங்கிணைத்தார். புருஷோத்தமன் ஆசிரியர் நன்றி கூறினார்.
02-Jul-2025