உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்ட மேடை பணி விறுவிறு

தமிழக வெற்றிக் கழக மாநாடு பிரமாண்ட மேடை பணி விறுவிறு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மிக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி, கடந்த 4ம் தேதி பூமி பூஜையுடன் துவங்கியது.சென்னை, திருவேற்காடை சேர்ந்த பந்தல் அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமநாதன் ஆகியோர் பூமி பூஜை அன்றே பணியை துவங்கியுள்ளனர். 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநாட்டு திடலில், மேடையானது பைபாஸ் சாலையில் செல்பவர்கள் பார்க்கும் வகையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட உள்ளது.ரயில் பாதையில் இருந்து 500 மீட்டர் தள்ளி, மேடை அமைக்கப்படுவதால், தொண்டர்கள் ரயில்பாதைக்கு செல்வதை தடுக்க, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.மாநாடு மேடை தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் வடிவில், 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு 10,200 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. மேடையில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் தங்க அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது. தற்போது பந்தல் அமைக்கும் பணியாளர்கள் தங்குவதற்கும், சமைப்பதற்கும் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் உணவருந்த வசதியாக மாநாட்டு திடலில் 500 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், மாநட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பணிகளை முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது.மாநாடு பணிகளை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவ்வப்போது பார்வையிட்டு, ஆலோசனை வழங்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

இரா. சந்திரன்
அக் 08, 2024 21:42

சாலை வழியாக ஊருக்கு தீபாவளிக்காக செல்பவர்கள் பாடு திண்டாட்டம்தான். அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு.


Rajesh
அக் 08, 2024 19:46

தி மு க வின் கொள்கை பரப்பு செயலாளர் தன ஜோசப் விஜய்


Balamurugan
அக் 08, 2024 12:59

உருப்படாமல் போக வாழ்த்துக்கள். வரி ஏய்க்க நினைப்பவன் எப்படி மக்களுக்கு உண்மையாக இருப்பான். பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவன் மக்களை எப்படி காப்பாற்றுவான். விஜய்க்கு மக்கள் பணி செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் எல்லாம் துளியும் கிடையாது.


Venkatesan Ramasamay
அக் 08, 2024 11:49

நல்லவங்க எல்லோரும் உங்க பின்னாலே நீங்க நினைச்சதில்லம் நடக்குமுகங்க கண்ணனுமுன்னாலே மாநாடு கடவுள் துணையுடன் இனிதே நடந்து முடியும் மாநாடு வெற்றியடைய வாழ்த்துக்கள்


sankaranarayanan
அக் 08, 2024 10:51

தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் விக்கிரவாண்டிக்கு சென்றுவிட்டதோ என்றே எல்லோரும் சந்தேகம்படும்படி செய்வார்கள் போலிருக்கிறதே நல்ல யோஜனை துணிந்து செய்கிறார்கள் வாழ்த்துக்கள்


N.Purushothaman
அக் 08, 2024 07:06

சரி ...இந்த பிரம்மாண்ட மேடைக்கு வடிவமைப்பது மற்றும் அது தொடர்பான தரவுகள் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளரால் ஆய்வு செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதா ? மண்ணின் தரம் பரிசோதனை செய்யப்பட்டதா ? தற்போது பந்தல் போடுபவர்களை பார்த்தால் ஒருத்தனிடமும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு இல்லை என்பது தெளிவு...எவ்வளவு விபத்துக்கள் உயிரிழப்புக்கள் ஏற்பட்டாலும் பாதுகாப்பில் விழிப்புணர்வு அடையாமலேயே இருக்கிறோம் .... அது சரி ...அரசே விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் போது மக்களிடம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும் ?


Kasimani Baskaran
அக் 08, 2024 06:38

ஒற்றை மனிதராக புஸ்ஸி ஆனந்த் குப்பை அள்ளிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி பொதுமக்களை பரவசப்படுத்தியது.


Ramesh N
அக் 08, 2024 06:37

பாகியராஜ், டீ ராஜேந்தர், சிவாஜி வழியில் விஜய். Better for him to join a party which is closer to his policy. A big loss to the film industry. Very difficult to sustain in politics unless he has skills to get votes.


KavikumarRam
அக் 08, 2024 10:34

A big loss to film industry??? Hope you didn't watch his recent movies. All disaster. Even I won't suggest my enemy to watch GOAT movie,


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை