அரசு பள்ளி மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்கல்
செஞ்சி: செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்களை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கினார்.செஞ்சி ராஜா தேசிங்கு அரசு மேல்நிலைப் பள்ளி யில் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சித் தலைவர் மொக்தியார் அலி முன்னிலை வகித்தனர். திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியம் வரவேற்றார்.மஸ்தான் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கி, கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார். பி.டி.ஏ., தலைவர்கள் மாணிக்கம், திலகவதி, பேரூராட்சி கவுன்சிலர்கள் பொன்னம்பலம், சங்கீதா, சுமித்ரா, மேலாண்மை குழு தலைவர் சரஸ்வதி, முன்னாள் கவுன்சிலர் நெடுஞ்செழியன். பள்ளி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.