வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கோவிலில் ஒரு யானையால் ஒரு பாதிப்பு நடந்தால் தமிழ்நாடு பூராவும் குய்யோ, முய்யோ என்று கத்துபவர்கள் அரசு பேருந்துகளால் தினம் ஆயிரம் அநியாயங்கள் நடக்கிறது அங்கெல்லாம் கத்த மாட்டார்கள்
கள்ளக்குறிச்சி : உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், 7 பேர் காயம் அடைந்தனர்.விழுப்புரத்தில் இருந்து உளுந்துார்பேட்டை நோக்கி, திருநாவலுார் பகுதி மடப்பட்டு மேம்பாலம் அருகே, நேற்று மதியம் 2:00 மணிக்கு மினி வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஆடு சென்றதால், டிரைவர், வடலுாரை சேர்ந்த சுரேஷ்,51; பிரேக் போட்டு, வேனை நிறுத்தினார். அப்போது, ஐதராபாத்தில் இருந்து திருச்சி நோக்கி, வேலுாரை சேர்ந்த பாலன்,55; என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி, அந்த மினி வேன் பின்னால் மோதியது. இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து திருச்சி நோக்கி ராணிப்பேட்டையை சேர்ந்த யுவராஜ்,36; என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து, கன்டெய்னர் லாரி மீது மோதியது.இதில் பஸ்சில் பயணம் செய்த செல்வி,30; ரவி,40; ஜெயக்குமார்,44, செந்தாமரை,56, சுபா ஆனந்தி,47, உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருநாவலுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவிலில் ஒரு யானையால் ஒரு பாதிப்பு நடந்தால் தமிழ்நாடு பூராவும் குய்யோ, முய்யோ என்று கத்துபவர்கள் அரசு பேருந்துகளால் தினம் ஆயிரம் அநியாயங்கள் நடக்கிறது அங்கெல்லாம் கத்த மாட்டார்கள்