உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம் 

திண்டிவனம் அங்காளம்மன் கோவில் கும்பாபிேஷகம் 

திண்டிவனம் : திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 8:25 மணிக்கு கடம் புறப்பாடாகி அங்காள பரமேஸ்வரி அம்மன், செல்வகணபதி, பாலமுருகன், சிவலிங்கம், துர்க்கை அம்மன், நவகிரக சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.விழாவில், முன்னாள் அமைச்சர் சண்முகம், நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், பி.ஆர்.எஸ்.துணிக்கடை உரிமையாளர் ரங்கமன்னார், ராம்டெக்ஸ் துணிக்கடை வெங்கடேசன், கே.எஸ்.பி.துணிக்கடை தினகரன், பி.என்.ஆர்.சில்க்ஸ் உரிமையாளர் ஆதிநாராயணன்.பால்பாண்டியன் பாத்திரக்கடை உரிமையாளர் பால்பாண்டியன் ரமேஷ், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., ஜெ.,பேரவை செயலாளர் வடபழனி மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை, திண்டிவனம் பருவத ராஜகுல மீனவ சமூக ஆலய தர்மகர்த்தாக்கள், பங்கு தாரர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ