திண்டிவனம் மருத்துவமனை கட்டட பணி: அதிகாரிகள் ஆய்வு
திண்டிவனம் : திண்டிவனம் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.திண்டிவனம் தலைமை மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி, ரூ.60 கோடி மதிப்பில் 5 மாடி கொண்ட 2 மருத்துவமனை வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. மருத்துவமனையை சுற்றி சாலை, மின்சாதனங்கள் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கற்பகம், உதவி பொறியாளர் ஜெயபாலன் நேற்று மருத்துவனை பணிகளை ஆய்வு செய்தனர். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் முரளிஸ்ரீ உடனிருந்தார். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தனர்.