உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் நேஷனல் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திண்டிவனம் நேஷனல் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திண்டிவனம்: திண்டிவனம் நேஷனல் மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனத்திலுள்ள நேஷனல் மேல்நிலைபள்ளியில் கடந்த 1996-97ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் ஆனந்த், ஜெயப்பிரகாஷ், பார்த்திபன் தலைமையேற்று நடத்தினர்.பள்ளி செயலர் வெங்கடேசன், பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் குமார்தேவன், பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ், ஆசிரியர்கள் தாமோதரன், கேசவராமன், தண்டபாணி, காஞ்சனா, சாந்தா ஆகியோர் அறிவுரை வழங்கினர்.நிகழ்ச்சியை ஆசிரியர் பாலசுப்ரமணிய பாரதி, ரங்கநாதன் தொகுத்து வழங்கினர். முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு அலமாரி, 494 மதிப்பெண் பெற்ற மாணவி காவியாவை பாராட்டி பரிசு வழங்கினர். பிரபாகர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி