உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,மதிவாணன் தகவல் 

திண்டிவனம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு எஸ்.பி.,மதிவாணன் தகவல் 

திண்டிவனம்: திண்டிவனத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும், என்று விழுப்புரம் எஸ்.பி.,தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் எஸ்.பி.,மதிவாணன் நேற்று மாலை 6:30 மணியளவில், திண்டிவனம் நகர போலீஸ் ஸ்டேஷனில், ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, போலீஸ் நிலையத்தில் வழக்கு தொடர்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம், போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். குற்றவழக்குகளின் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட விபரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின், போலீஸ் ஸ்டேஷனில், பணியாற்றும் காவலர்களின் குறைகளை கேட்டறிந்தார்.  இது குறித்து எஸ்.பி. மதிவாணன் கூறுகையில், ‘ திண்டிவனம் நகரத்தில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் நடவடிக்கைககள் எடுக்கப்படும். போக்குவரத்து காவல் நிலையத்திற்கு கூடுதல் போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரத்தில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் நடைபாதை ஆக்கிரமிப்புகள்  அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், ’ என்றார். ஆய்வின் போது, டவுன் டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்மணி, தனிப்பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்