உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளைஞர்கள் நடத்திய பாரம்பரிய கூத்து

இளைஞர்கள் நடத்திய பாரம்பரிய கூத்து

செஞ்சி: நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி இளைஞர்கள் தெருக்கூத்து நடத்தினர். செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊர் நன்மைக்காக தீபாவளி பண்டிகையின் போது பாரம்பரியமாக உள்ளூர் மக்கள் வேடமிட்டு மத்திர கூத்து நடத்தி வருகின்றனர்.பாரம்பரிய முறை அழியாமல் இருக்க இன்றைய தலைமுறையைச் சேர்ந்த உயர்கல்வி படித்த இளைஞர்கள், ஆசிரியர்கள், அரசு பணியில் உள்ளவர்கள், மூத்த தெருக்கூத்து கலைஞர்கள் மந்திர கூத்தை நேற்று முன்தினம் இரவு நடத்தினர். மந்திர, தந்திரங்களால் வசியம் செய்யப்படும் கிராமத்தை பெண் ஒருவர் போராடி மந்திர தந்திரங்களை உடைத்து ஊரை பாதுகாக்கும் கதையை கருவாக கொண்டு இந்த கூத்தை இளைஞர்கள் நடத்தினர்.சிறப்பு பார்வையாளர்களாக புதுச்சேரி பல்கலைக் கழக மானுடவியல் துறை முன்னாள் தலைவர் செல்லபெருமாள், இலங்கை தெருக்கூத்து கலைஞர்கள் பங்கேற்றனர். சுற்று வட்டார கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை