உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திருச்சி நோக்கி அணிவகுத்த வாகனங்கள் விழுப்புரம் பைபாசில் டிராபிக் ஜாம்

திருச்சி நோக்கி அணிவகுத்த வாகனங்கள் விழுப்புரம் பைபாசில் டிராபிக் ஜாம்

விழுப்புரம்: திருச்சி மார்க்கத்தில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்ததால், விழுப்புரத்தில் நேற்று வாகன நெரிசல் ஏற்பட்டது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என 10 நாள்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், சென்னையிலிருந்து, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், கடந்த சில தினங்களாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் வாகனங்கள் செல்கின்றன. இதே போல், நேற்று காலை முதல் மதியம் வரை, திருச்சி மார்க்கத்தில் இருமடங்கு வாகனங்கள் அதிகரித்திருந்தது. விழுப்புரம் பைபாஸ் சாலையில், ஜானகிபுரம் பைபாஸ் சந்திப்பு பாலத்தில் ஏராளமான கார்கள், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் குவிந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரண்டு, மூன்று வரிசையாக வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன. காலை 10 மணி முதல் மாலை 3.00 மணி வரை நெரிசல் நிலை தொடர்ந்தது. ஜானகிபுரம் முதல் எல்லீஸ் சத்திரம் சாலை சந்திப்பு வரை இந்த நெரிசல் நிலை ஏற்பட்டது. ஜானகிபுரம் மற்றும் விழுப்புரம் எல்லீஸ் சத்திரம் சந்திப்பில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார், வாகனங்களை சீர்படுத்தி அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ