மேலும் செய்திகள்
கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
13-Jun-2025
விழுப்புரம் : விழுப்புரத்தில் அலுவல் நேரங்களில் விதிமீறி நகருக்குள் வந்த லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.விழுப்புரம் நகரில் காலை, மாலை அலுவல் நேரங்களில் (பீக் அவர்ஸ்) அதிகளவு கனரக வாகன போக்குவரத்தால் நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் ஏற்படும் அச்ச நிலை தொடர்ந்து வருகிறது. இதனால், நேற்று விழுப்புரம் போக்குவரத்து போலீசார், சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் தலைமையில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட நேரங்களில் நகருக்குள் வந்த லாரிகளை நிறுத்தி தலா ரூ.1,000 அபராதம் விதித்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர்.விழுப்புரம் நான்கு முனை சிக்னல் சந்திப்பிலிருந்து, நேருஜி ரோடு, கிழக்கு பாண்டி ரோடு மாதா கோவில் வரை பள்ளி, கல்லூரி மற்றும் அலுவல் நேரங்களில், காலை 8.00 மணி முதல் காலை 11.00 மணி வரை, நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் அறிவுரை வழங்கினர். விதிமீறினால், வழக்கு பதிந்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.
13-Jun-2025