உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டமங்கலம் மேம்பாலத்தில் விரிசல்; சீரமைத்ததால் போக்குவரத்து துவங்கியது

கண்டமங்கலம் மேம்பாலத்தில் விரிசல்; சீரமைத்ததால் போக்குவரத்து துவங்கியது

கண்டமங்கலம்,; கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதி சாலையில் ஏற்பட்ட விரிசல் சீரமைக்கப்பட்டதை அடுத்து, தற்காலிகமாக வாகன போக்குவரத்து துவங்கியது.விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்த நிலையில், முதல்கட்டமாக பாலத்தின் தெற்கு பகுதி சாலையில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வாகன போக்குவரத்து துவங்கியது. மேம்பாலத்தின் வடக்கு பகுதி சாலை பணிகள் கடந்த டிச. 25ம் தேதி நிறைவடைந்து. வாகன போக்குவரத்து துவங்கும் முன்பே அச்சாலையில் விரிசல் ஏற்பட்டது.அதையடுத்து விரிசல் ஏற்பட்ட இடத்தில், கடந்த 28ம் தேதி ராட்சத பொக்லைன் மூலம் 1 மீட்டர் அகலம், 50 மீட்டர் நீளம், 1 அடி ஆழத்திற்கு சாலையை தோண்டி சீரமைக்கும் பணி துவங்கியது. இந்த பணிகள் கடந்த கடந்த 3ம் தேதி முடிந்தது.வாகன போக்குவரத்து துவங்க தென்னக ரயில்வேயின் திருச்சி கோட்ட அதிகாரிகளின் அனுமதி பெறவேண்டியுள்ளது.இந்நிலையில் பாலத்தின் வடக்கு பகுதி சாலையில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து துவங்கியது.தென்னக ரயில்வே அதிகாரிகள் அனுமதி பெற்ற பின்னர், மேம்பாலத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி சாலை வழியே தடையின்றி 100 சதவீதம் வாகன போக்குவரத்து தொடரும் என 'நகாய்' அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M.Srinivasan
ஜன 07, 2025 20:52

இன்று ௦௭.௦௧.௨௦௨௫ காலை விரைந்து சீர்காழி செல்ல வேண்டிய இருந்ததால் கடலூரில் ஆட்சியர் அலுவலகம் வழியாக புதிய விரைவு சாலையில் குடும்பத்துடன் பயணித்தோம் என்னே கொடுமை விரைவு சாலையில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து உள்ளார்கள். வேறு வழியில் செல்ல சரியான வழிகாட்டு பலகைகளும் அமைக்கவில்லை. விரைவுப் சாலையிலேயே சுற்றி சுற்றி கடலூரை கடப்பதற்கு 45 நிமிடங்கள் ஆகியது. மிக மோசமான அனுபவம். புதுச்சத்திரம் தான்டியதும் புதிதாக ஒரு டோல்கேட். ஒருவழி பயணத்திற்கு ₹125/- கட்டணம் பிடித்துக் கொண்டார்கள். மிக மோசமாஅன சேவைக்கு கட்டணம் . தமிழனாய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும் ?


முக்கிய வீடியோ