பயிற்சி முகாம்
செஞ்சி: மாவட்ட உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராம செழுமை மீள் தன்மை திட்ட, 2 நாள் பயிற்சி முகாம் செஞ்சி, ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தார். வட்டார இயக்க மேலாளர் காயத்ரி வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., முகாமை துவக்கி வைத்து பேசினார். பி.டி.ஓ., பிரபாசங்கர், மண்டல துணை பி.டி.ஓ.,க்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட வள பயிற்றுநர் அபிராமி, மத்திய மாநில அரசுகள் கிராம அளவில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளித்தார். துணை பி.டி.ஓ., சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.