உழவர்களுக்கு பயிற்சி
வானூர்: வானூர் வட்டம் புளிச்சப்பள்ளம் ஊராட்சியில் எஸ்.ஆர்.எம். கல்லூரி மாணவிகள் சார்பில் உழவர்களுக்கு பயிற்சி நடந்தது.முகாமிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜவஹலால், முனைவர்கள் ராஜசேகரன், நவீன் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தில் தங்கி இருக்கும், வேளாண் கல்லூரி மாணவிகள், உழவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பிரிவின் கீழ் தேனி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் வீட்டு காய்கறி தோட்டம் அமைத்தல் பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளித்தனர்.முனைவர்கள் முருகன், ராமஜெயம், கண்ணன், புள்ளிச்சப்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில், கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந்த பயிற்சி நிகழ்ச்சியை மாணவிகள் வினிதா, தர்ஷினி, சந்தியா, அகிலா, கிர்த்தனா, சரண்யா, திவ்யா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.