உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கு நாகையில் பயிற்சி

விவசாயிகளுக்கு நாகையில் பயிற்சி

விழுப்புரம்: கோலியனூர் வட்டார வேளாண்மைத்துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ், விவசாயிகள் நாகப்பட்டினத்திற்கு பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோலியனுார் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட 40 விவசாயிகள், நாகப்பட்டினம் வேளாண் ஆராய்ச்சி நிலையம் மூலம் நடக்கும் நுண்ணீர் பாசனம், மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டுதல் பயிற்சியில் பங்கேற்க விழுப்புரத்திலிருந்து நாகைக்கு தனி பஸ்சில் விவசாயிகள் புறப்பட்டனர். வேளாண் உதவி இயக்குநர் பிரேமலதா, ஆத்மா திட்ட அலுவலர் சிரஞ்சீவி, வேளாண் அலுவலர்கள் இளங்கோவன், நடராஜன் அழைத்துச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !