உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழங்குடியினர் ஊர்வலம்

பழங்குடியினர் ஊர்வலம்

செஞ்சி : செஞ்சியில், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த பழங்குடியினர் அமைப்பு சார்பில் ஊர்வலம் நடந்தது. திருவண்ணாமலை சாலையில் துவங்கி கூட்ரோடு வழியாக திண்டிவனம் சாலையில் தாசில்தார் அலுவலகம் முன்பு ஊர்வலம் முடிந்தது. அங்கு அனைவரும் பழங்குடியினர் விழிப்புணர்வு உறுதிமொழியேற்றனர். பழங்குடியினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டும் என அரசை வலியுறுத்தி கோரிக்கை மனுவை, செஞ்சி தாசில்தார் அலுவலகத்தில் கொடுத்தனர். இதில் பழங்குடியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை