ஒன்றிய குழு கூட்டம்
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய சேர்மன் ஓம் சிவசக்திவேல் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., ரவி முன்னிலை வகித்தார். துணைச் சேர்மன் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். அலுவலக கணக்காளர் சிலம்பரசன் தீர்மானம் வாசித்தார். கூட்டத்தில், குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு, சுகாதாரம், பள்ளி கழிவறை, சுற்றுச்சூழல், மயான பாதை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கவுன்சிலர்கள் தங்கள் பகுதி குறைகள் குறித்து ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணை பி.டி.ஓ., அலுவலக பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.