உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பயனற்றுக் கிடக்கும் உடற்பயிற்சி கூடம்: சத்தியமங்கலத்தில் அவலம்

பயனற்றுக் கிடக்கும் உடற்பயிற்சி கூடம்: சத்தியமங்கலத்தில் அவலம்

செஞ்சி: சத்தியமங்கலத்தில் செயலிழந்து கிடக்கும் உடற்பயிற்சி கூடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2016--17ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியின் போது, கிராமப்புற இளைஞர்களின் திறன்களை பயனுள்ளதாக மாற்றவும், உடல் நலம், மனநலத்தை பாதுகாப்பதுடன், கிராமப்புற இளைஞர்கள் தவறான வழிக்கு செல்லாமல், ஒருமுகப்படுத்தி விளையாட்டுக்களின் மூலம் தனித்திறனை வளர்க்க பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது.இந்த திட்டத்தில், செஞ்சி ஒன்றியம், சத்தியமங்கலத்தில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தையும் ஏற்படுத்தி, 5 லட்சம் ரூபாய் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டது.துவக்கத்தில் உடற்பயிற்சி கூடத்தை இளைஞர்கள் பயன்படுத்தினர். பொதுமக்களும் பூங்காவிற்கு வருகை தந்தனர். ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்க அரசு தரப்பில் இருந்து நிதி வழங்கவில்லை.இதனால் அடுத்து சில ஆண்டுகளிலேயே உடற்பயிற்சி கூடத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்குள்ள உடற்பயிற்சி உபகரணங்களும் பயன்படுத்தாமல் பழுதாகி போய்விட்டன.தமிழகம் முழுவதும் இளைஞர்கள் போதை வஸ்துகளுக்கு அடிமையாகி வரும் நிலையில், இளைஞர்களை பாதுகாக்க விளையாட்டிலும், உடற்பயிற்சியிலும் கவனத்தை திருப்ப வேண்டியது அவசியமாகி உள்ளது.தற்போது கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய அரசு வங்கிகள், தொழிற்சாலைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தயாராக உள்ளன.இது போன்ற அமைப்புகளை அதிகாரிகள் தொடர்பு கொண்டு இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தை சீரமைக்கவும், தொடர்ந்து பராமரிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ