மேலும் செய்திகள்
பட்டய கணக்காளர் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி
05-Nov-2024
விழுப்புரம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, மத்திய அரசின் யூ.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.கலெக்டர் பழனி செய்திக் குறிப்பு:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம், டாக்டர் அம்பேத்கர் அகாடமி மற்றும் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மத்திய அரசின் யூ.பி.எஸ்.சி., தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.ஓராண்டு காலம், தேர்வுக்கான முதல் நிலை மற்றும் முதன்மை நிலை பயிற்சி வழங்கப்படும். இதற்காக நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறும் 100 மாணவர்களுக்கு முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற, 21 முதல் 36 வயது நிரம்பிய மாணவர்கள் பங்கேற்கலாம்.இதன்படி, ஒரு ஆண்டு விடுதி வசதி மற்றும் பயிற்சி செலவு தொகை தாட்கோ மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தில் www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
05-Nov-2024