உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேபிஸ் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

ரேபிஸ் ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில், தெரு நாய்கள் கடிக்கும் சம்பவத்தை தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் ரேபிஸ் ஒழிப்பு செயல்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தியுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்ட தலைவர் தாவூத்அலி உள்ளிட்டோர், கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டத்திலும், தெருநாய்கள் மக்களை கடித்து வரும் சம்பவம் கவலைக்குரியதாக உள்ளது. தமிழக அளவில் இந்தாண்டு 3 மாதங்களில் மட்டும் 1.24 லட்சம் நாய்கடி சம்பவங்களும், 4 ரேபிஸ் பாதிப்பு மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இதனால், நாய் கடி தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, மாவட்ட அளவில் ரேபிஸ் ஒழிப்பு செ யல் திட்டம் ஏற்படுத்த வே ண்டும், வீதிநாய்களுக்கு வருடாந்திர தடுப்பு மருந்து செலுத்த வேண்டும், கிராம பகுதியிலும் முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும், நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் அறுவை சிகிச்சை முகாம் நடத்த வே ண்டும். அரசு மருத்துவமனைகளில் நாய்க்கடி நோய்க்கான தடுப்பு மருந்து வைத்திருக்க வேண்டும், நாய் கடி, ரேபிஸ் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, மனுவில் கோரியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை