மேலும் செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடித்து கொண்டாட்டம்
17-Aug-2025
விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த வைகானச ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு தொடங்கி மூலவர், உற்சவர் பெருமாளுக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
17-Aug-2025