உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வல்லம் ஒன்றிய கூட்டம்

வல்லம் ஒன்றிய கூட்டம்

செஞ்சி : வல்லம் ஒன்றிய கூட்டத்தில் ஒன்றிய சேர்மன் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். வல்லம் ஒன்றிய கூட்டம் தலைவர் அமுதா ரவிக்குமார் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் உதயகுமார், இளங்கோ முன்னிலை வகித்தனர். மேலாளர் மணிகண்டன் வரவேற்றார். ஒன்றியத்தில் நடந்த வரவு செலவுகளுக்கு ஒப்புதல் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில், ஒன்றிய சேர்மன், தமிழக பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு புதிய திட்டம் அறிவித்ததற்கும், விடுபட்ட மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்க மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.துணைச் சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் அமிர்தம், கோமதி, கம்சலா, ராஜேந்திரன், ஜெயலலிதா, விஜயா, பிரபாகரன், கோபால், பத்மநாபன், பக்தவச்சலம் உட்பட அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை