உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா மலர்

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவில் தேர் திருவிழா மலர்

கா கபுஜண்டர் நாடி ஜோதிடம் புகழ்பெற்றது. காகநபுஜண்டர் மாயூரத்தில் (மயிலாடுதுறை) அந்தணர் குடும்பத்தில் பிறந்தவர். சிவனை வேண்டி சிவதரிசனத்திற்காக கடும் தவம் புரிந்தவர். மாயூரநாதனான சிவபெருமாள் நேரில் தோன்றி காகபுஜண்டரை யுகங்கள் பல கண்டு வாழ்வாயாக என அருள்வாக்கு அளித்தார். காகபுஜண்டர் தனது முற்பிறவியில் விஷ்ணு பக்தர்களை அவமானப்படுத்தினார். சிவபெருமானின் சாபத்தினால் பாம்பு பிறகு முதல் பல பிறவிகளை எடுத்தார். கடைசி பிறவியில் காகவடிவம் அடைந்தார். யுகங்கள் பல கடந்தன. ராமரின் வடிவழகையும், குணநலன்களையும் பாடினார். இந்த வரலாறு தெடர்பாக காகபுஜண்டர் பள்ளி துளசி ராமாயணம் உத்திரகாண்டத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது. காகபுஜண்டர் ஓலை அரிச்சுவடியில் எழுதிய நாடி ஜோசியத்தைக் கேட்ட பலர் வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால், வேண்டுதல் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையால் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபடுகின்றனர். அதிகாலை 4:00 மணிக்கு ஒலிக்கும் கோவில் ஓசை கடற்கரை மீனவ கிராமமான வீராம்பட்டினத்தில் தினமும் அதிகாலை 4:00 ணிக்கு செங்கழுநீரம்மன் கோவில் மணி அடிக்கப்படுகிறது. இன்றும் இக்கோவிலில் அதிகாலை 4:00 மணிக்கு கோவில் மணி அடிப்பது தொன்று தொட்டாக தொடர்கிறது. பொழுது விடிந்து சூரியன் உதயமாகும் எழுந்து வலையை கடலின் வீசினால் தான் மீன்கள் கிடைக்கும். எனவே, சூரியன் எழுந்திருக்க போகிறது. சீக்கிரம் எழுந்து கடலுக்குள் செல்லுங்கள் என மக்களை எழுப்பதற்காகவே சக்தி கோவிலான செங்கழுநீர் அம்மன் கோவிலில் கோவில் மணி அதிகாலையில் அடிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ