உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தென்மாவட்டங்களுக்கு 3வது நாளாக வாகனங்கள் அணிவகுப்பு

தென்மாவட்டங்களுக்கு 3வது நாளாக வாகனங்கள் அணிவகுப்பு

விக்கிரவாண்டி; தொடர் விடுமுறை காரணமாக, தென்மாவட்டங்களுக்கு நேற்று 3வது நாளாக ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து சென்றன.கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (25ம் தேதி) கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, வரும் 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதற்காக, சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள், கடந்த 21ம் தேதி முதல் பஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தங்கள் சொந்த ஊருக்கு செல்லத் துவங்கினர்.இந்நிலையில், பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நேற்றுடன் முடிந்தது. அதனையொட்டி பள்ளிகளுக்கு இன்று முதல், வரும் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 21, 22ம் தேதிகளில் 81,500 வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்பிளாசாவை கடந்து தென்மாவட்டங்களுக்கு சென்றன.நேற்று 3வது நாளாக தேசிய நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்து காணப்பட்டது. மாலை 6.00 மணி வரை 23 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ