உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விழுப்புரம் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், குழந்தைகளுக்கு அரிச்சுவடி எழுதும், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.விஜயதசமியை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஹயகிரீவர் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, குழந்தைகள் கல்வி பயில்வதற்காக நெல் மற்றும் அரிசியில் 'அ' எழுத்தை எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து 'அ' என்கிற எழுத்தை அரிசியில் எழுத பயிற்றுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ