உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அரசு பேராசிரியர்கள் இரவில் உள்ளிருப்பு போராட்டம்

விழுப்புரம் அரசு பேராசிரியர்கள் இரவில் உள்ளிருப்பு போராட்டம்

விழுப்புரம், : விழுப்புரம் அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி வளாகத்தில், நேற்று மாலை 5:00 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர். அரசு அண்ணா பல்கலைக் கழக கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். கடந்த 15 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேராசிரியர்களுக்கான பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களிடம் கேட்டபோது, கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு முழுவதும், கல்லுாரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ