உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் மண்டல அளவிலான போட்டிகள் அரசு கல்லுாரி மாணவர்கள் 700 பேர் வெற்றி 8 மாணவர்கள் கேலோ இந்தியா போட்டிக்கு தகுதி

விழுப்புரம் மண்டல அளவிலான போட்டிகள் அரசு கல்லுாரி மாணவர்கள் 700 பேர் வெற்றி 8 மாணவர்கள் கேலோ இந்தியா போட்டிக்கு தகுதி

விழுப்புரம்: விழுப்புரம் அரசு கலை கல்லுாரியில் 56வது விளையாட்டு ஆண்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் சேட்டு, கனகசபாபதி முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குனர் ஜோதிப்பிரியா விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தார். தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமசிகாமணி, மண்டல மற்றும் பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மண்டல அளவிலான கைப்பந்து, கையுந்து பந்து, கூடைப்பந்து, கால்பந்து, பென்காக் சிலாட், மல்லர் கம்பம், ஜூடோ, மல்யுத்தம், தடகளம், கோகோ உள்ளிட்ட போட்டிகளில் இக்கல்லுாரி மாணவர்கள் 700 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய அளவிலான போட்டிகளில் 42 பேர் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர். அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில், விழுப்புரம் அரசு கலை கல்லுாரி மாணவர்கள், முதல் 8 இடங்களை பிடித்து கேலோ இந்தியா போட்டிகளில் பங்கேற்க தகுதியை பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. விழாவில், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், துணை சேர்மன் சித்திக்அலி, தி.மு.க., மாணவரணி அமைப்பாளர் வினோத், வாலிபால் மணி, பேராசிரியை கலைசெல்வி உட்பட துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ