உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி விழிப்புணர்வு

 வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி விழிப்புணர்வு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியம், பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. விக்கிரவாண்டி ஒன்றியம் பிரம்மதேசம், நேமூர், தொரவி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கான படிவங்களை பி.எல்.ஓ.,க்கள் வழங்கி வருகின்றனர். தி.மு.க., தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி மற்றும் கட்சியினர் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவம் நிரப்புவது குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், தொகுதி பொறுப்பாளர் ஜெயராஜ், மாநில மகளிர் அணி பிரசார குழு செயலாளர் தேன்மொழி, பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணை சேர்மன் பாலாஜி. ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபால், கில்பர்ட் ராஜ், நகர செயலாளர் நைனா முகமது, துணைச் செயலாளர் சுரேஷ்குமார், சித்ரா, மாவட்ட பிரதிநிதி வேல்முருகன். மாவட்ட அமைப்பாளர்கள் சுரேஷ் ,சூர்யா, நகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவா, இம்ரான், சைபுல்லா, ஞானம், கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி