மேலும் செய்திகள்
வீரபாண்டியில் ஜெ ., பேரவை திண்ணை பிரச்சாரம்
07-Jul-2025
திண்டிவனம் : திண்டிவனம் அ.தி.மு.க., பிரமுகர் டி.கே.குமார் இல்ல திருமண விழாவில், அக்கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழுப்புரம் மாவட்ட ஜெ., பேரவை இணை செயலாளர் டி.கே.குமார் மகள் டாக்டர் துளசி-டாக்டர் அசோக்குமார் திருமணம் பட்டானுார், சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடந்தது. விழுப்புரம் மாவட்ட செயலாளர் சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், சக்கரபாணி, மாநில ஜெ.,பேரவை இணை செயலாளர் பாலசுந்தரம், திண்டிவனம் நகர செயலாளர் தீனதயாளன், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், விழுப்புரம் மாவட்ட ஜெ.,பேரவை இணை செயலாளர்கள் விஜயகுமார், வடபழனி, திண்டிவனம் நகர ஜெ.பேரவை செயலாளர் ரூபன்ராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் எல்.ஐ.சி.ரவி, திண்டிவனம் நகர மாணவர் அணி துணை செயலாளர் மாலோலன், நகர எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் உதயகுமார், ஒன்றிய செயலாளர்கள் விஜயன், நடராஜன், ரவி வர்மன், பன்னீர், கவுன்சிலர்கள் கார்த்திக், ஜனார்த்தனன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,செயலாளர் மஸ்தான், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், ஒப்பந்தாரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்தவர்களை, மணமக்களின் பெற்றோர் டி.கே.குமார்-கல்யாணி, காளியப்பன்-கண்ணகி ஆகியோர் வரவேற்றனர்.
07-Jul-2025