உள்ளூர் செய்திகள்

 திருக்கல்யாணம்

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, திருநகர் மகாலட்சுமி குபேரர் கோவிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 31ம் தேதி காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம், காலை 8:00 மணிக்கு அலங்கார திருமஞ்சனம், மாலை 4:45 மணிக்கு சீர்வரிசை புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் இரவு 9:00 மணிக்கு பள்ளி அறை சேர்த்தி சேவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !