பதக்கம் வென்ற வீரருக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
விழுப்புரம் : ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் கோப்பை வென்று திரும்பிய மாணவருக்கு, விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மோகனவேல். சென்னை விளையாட்டு பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி., பயின்று வருகிறார்.இந்திய அணி சார்பில், உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். இரட்டையர் பென்காக் சிலாட் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்றார்.இந்தியா திரும்பிய அவருக்கு, விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகே பொன்னங்குப்பம் கிராம மக்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.