உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், தாட்கோ சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். தமிழக துாய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, குறைகளை கேட்டறிந்து சிறப்புரையாற்றினார். இதில், கலெக்டர் பேசுகையில், 'நலவாரியத்தில் துாய்மைப்பணியாளர்கள் பதிவு செய்வதன் மூலம், அட்டை கிடைக்கும். அதில் உறுப்பினர் எண் மட்டும் இருந்தால் போதும். அரசு திட்டங்கள் எளிதாக கிடைக்கும்,' என்றார். இதில் தாட்கோ மூலம், 17 பணியாளர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.1.24 லட்சம் மதிப்பில், இயற்கை மரணம், திருமணம், கல்வி உதவித்தொகை நிதியுதவி, 105 பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., அரிதாஸ், வாரிய துணைத்தலைவர் கனிமொழி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ்குமார், உறுப்பினர்கள் கண்ணன், ராஜன், சீனுவாசன், ஹரிஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ