உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெருந்திட்ட வளாக சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

பெருந்திட்ட வளாக சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

விழுப்புரம்: விழுப்புரம் பெருந்திட்ட வளாக சாலையில், விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர், டி.ஐ.ஜி., - எஸ்.பி., மற்றும் தாலுகா அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகங்களுக்கு செல்ல பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இருந்து பிரதான சாலையும், இணைப்பு சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிரதான சாலையில் செல்லும் வேகமாக செல்கின்றது. இதேபோன்று, இணைப்பு சாலைகளில் இருந்து வரும் வாகனங்களும் வேகமாக வந்து திரும்புகின்றன. இதனால், வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, விபத்தை தடுக்கும் வகையில், பெருந்திட்ட வளாக பிரதான சாலை மற்றும் இணைப்பு சாலைகளில் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ