உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சேவை மைய பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

 சேவை மைய பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஒருங்கிணைந்த சேவை மைய பாதுகாவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு; விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்கத்திற்காக மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்திற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்போது பாதுகாவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு கல்வித்தகுதி பிளஸ் 2 படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இதற்கான மாத ஊதியம் 12000 ரூபாய் வழங்கப்படும். மேலும், பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். இப்பணி முற்றிலும் தற்காலிகமானது. தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் 31ம் தேதிக்குள், விழுப்புரம் கலெக்டர் அலுவலகவளாகத்தினுள் செயல்பட்டு வரும் அறை எண்.26, மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ