மேலும் செய்திகள்
கஞ்சா விற்றவர் கைது
16-Aug-2025
விழுப்புரம்: விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் லட்சுமி நகரில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியைச் சேர்ந்த பிரபு மகன் மணிகண்டன், 22; என்பதும் அவரது பாக்கெட்டில் விற்பனைக்காக கஞ்சா வைத்தருந்தது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இவருக்கு தொடர்புடைய ராகவன்பேட்டையைச் சேர்ந்த விஷ்ணு, 29; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
16-Aug-2025